ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுவரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9,445க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.75,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.9,375க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாறாமல் நிலைத்துள்ளது
18 காரட் தங்க விலைவும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.7,745க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.61,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1,27,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்ட இந்த திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.