தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசமர தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். ஐடி ஊழியரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். அதில் சுரேஷ்குமார் ரூபாய் 50 ஆயிரத்தை இழந்துள்ளார்.
இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையின் வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
