காசா: “பாலஸ்தீன பீலே” என போற்றப்பட்ட முன்னாள் பாலஸ்தீன தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் (41), தெற்கு காசா பகுதியில் மனிதாபிமான உணவு உதவிக்காகக் காத்திருந்த பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

காசா நகரில் பிறந்த அவர், பாலஸ்தீன அணிக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 100-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து கால்பந்து வரலாற்றில் இடம்பிடித்திருந்தார். கதாமத் அல்-ஷாதி மற்றும் அல்-அமாரி யூத் சென்டர் கிளப்புகளுக்காக விளையாடிய அவர், 2010-ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களால் ஜோர்டானிய எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆறு காசா வீரர்களில் ஒருவராகவும் இருந்தார்.

“>

திருமணமான ஒபெய்ட், ஐந்து குழந்தைகளின் தந்தையாக இருந்தார். காசா போர் (அக்டோபர் 2023) தொடங்கியதிலிருந்து, கால்பந்து சமூகத்தைச் சேர்ந்த 321 பேரை உட்பட 662 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி இதுவரை 61,258 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்.