சமூக வலைதளங்களில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பது. இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிராமை தினமும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டா பையனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அளவு ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்துவர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் செயலி ஆதிக்கம் செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் தற்போது ரீல்ஸ் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் தற்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதில் ரிலீசுகள், லைவ் சாட்டுகள் என பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 3 அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது.

அதாவது பேஸ்புக்கில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீ போஸ்ட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோன்று பயனர்களுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக இன்ட்ராக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேட் ஆகிய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டுகள் பயனர்கள் வெகுவாக கவர்ந்தாலும் தனி உரிமை பாதிக்கும் வகையில் மேப் வசதி உள்ளிட்டவை இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.