உத்தரப்பிரதேசம் லக்னோவில், தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமதிநகர் பத்ரகார்புரப் பகுதியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி, சாலையோர படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த சோனு விஸ்வகர்மா என்ற நபர், ஒரு அப்பாவி தெரு நாயை வலுக்கட்டாயமாக பிடித்து பாலியல் வன்கொடுமை செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை நேரில் கண்ட ஒருவர் மறைந்து பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், அது வேகமாக வைரலாகி, பொதுமக்கள் கடும் கண்டனம் வெளியிட்டனர்.
வைரலான காட்சிகளில், குற்றவாளி தனது லுங்கியை தொடைகளுக்கு மேல் கட்டியபடி, நாயை வலுக்கட்டாயமாக பிடித்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவது தெளிவாகக் காணப்படுகிறது. சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், கோமதிநகர் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து சோனுவை கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்ததும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அருவருப்பான சம்பவம், விலங்குகள் மீதான வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களில் கடுமையான விதிகள் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர்காலத்தில் இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்கும் வகையில், கடுமையான தண்டனைகள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
