உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாநகராட்சியில் மேயராக இருப்பவர் டாக்டர் உமேஷ் கௌதம். இவருக்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் அவருக்கு ராக்கி கட்டி உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ராக்கி கட்டிய பெண்களுக்கு பரிசு தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். தனது சகோதரிகளின் நலன் தனது கடமை என்று அவர் கூறியுள்ளார். ராக்கி கட்டும் போது சகோதரர்கள் இல்லாத சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டனர். உமேஷை தங்கள் சொந்த சகோதரனாக கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் உமேசும் உணர்ச்சிவசப்பட்டார் அவரது கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்தது.
