தெருவில் நடந்து செல்லும்போதோ, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதோ, தெரு நாய்கள் நம்மை குரைத்து துரத்துவது வழக்கமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இத்தகைய சூழலில், ஓடாமல் நின்று நாயை விரட்டினால், அது பயந்து ஓடிவிடும்; ஆனால், நாம் பயந்து ஓடினால், அது நம்மைத் தாக்க வாய்ப்புள்ளது என்பது பலருக்குத் தெரிந்த உண்மை.

ஆனால், இந்த அறிவை மீறி, ஒரு நபர் தன்னைத் துரத்திய நாய்க்கு மரண பயத்தைக் காட்டி, இனி யாரையும் துரத்தாதவாறு பாடம் கற்பித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை ஒரு நாய் துரத்த, அவர் தனது வண்டியை திருப்பி, மாறாக நாயை துரத்தத் தொடங்குகிறார். இதனால் பயந்து போன நாய், சந்து பொந்து, மூலை முடுக்கு என எல்லா இடங்களிலும் தெறித்து ஓடுகிறது.

ஆனால், இந்த நபர் விடாமல் ஆறு நிமிடங்களுக்கு மேலாக நாயை துரத்த, அது கீழே விழுந்து புரண்டு, காயமடைந்து ஓடுவதைக் காண முடிகிறது. இந்தக் காட்சி இணையத்தில் பரவ, நெட்டிசன்கள் பலர், “இதுதான் பெஸ்ட் ரிவெஞ்ச்! இனி அந்த நாய்க்குட்டி வாழ்நாளில் யாரையும் குரைத்து துரத்தாது,” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kanchipuram Buddies (@kanchipuram_buddies)

“>

சிலர் இதை “நாய்க்கு சரியான பாடம்” எனப் பாராட்ட, மற்றவர்கள் இதுபோன்ற செயல்கள் தெரு நாய்களின் பயத்தைத் தூண்டி, மேலும் ஆபத்தை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளனர். இந்த வைரல் வீடியோ, தெரு நாய்களை கையாளும் விதத்தில் புதிய கோணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, அதேநேரம், இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுகிறது.