துனிசியாவின் சூஸ் கடற்கரையில் விடுமுறைக்காக வந்திருந்த 52 வயது பிரிட்டிஷ் நாட்டு பெண் மிஷேல் வில்சன், பராசெயிலிங் செய்யும் போது ஆபரேட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார்.
தோழியுடன் இணைந்து பறக்க திட்டமிட்டிருந்த அவர், வானிலை காரணமாக தனியாக ஆபரேட்டருடன் செல்ல வேண்டியிருந்தது. பறக்கும் போது, அந்த இளைஞர் தனது பிகினி உள்ளாடையின் பின்புறம் இழுத்து, கால்களை சுற்றி, தனது காலைத் தொடுவதாகவும், அரபியில் பேசிக்கொண்டே தவறாக நடந்து கொண்டார்,என அவர் கூறினார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வில்சன், “அவர் தொடர்ந்து என்னைத் தொட்டுக் கொண்டிருந்தார். என் மீது அழுத்தம் கொடுத்தார். நான் சங்கடத்தில் என் முதுகை வளைத்துக் கொண்டே இருந்தேன்” என தெரிவித்தார். தரையில் இறங்கியவுடன் நடுங்கிய அவர், உடனடியாக உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
NEW: British mother claims she was s*xually assaulted mid air by a parasail operator while parasailing in Tunisia, Africa.
52 year old Michelle Wilson says she was assaulted by the operator while strapped into the harness as they soared through the air.
“I could feel… pic.twitter.com/uDOs98wucf
— Collin Rugg (@CollinRugg) August 6, 2025
“>
வில்சன் தனது 17 வயது மகள், தோழி மற்றும் 16 வயது இரட்டை மகன்களுடன் சுமார் 8,000 அமெரிக்க டாலர் செலவில் விடுமுறைக்கு வந்திருந்தார். சம்பந்தப்பட்ட ஆபரேட்டர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் பிரிட்டிஷ் அதிகாரிகளும், அவரது காப்பீட்டு நிறுவனமும் உதவி செய்து வருகின்றன. அவர் பயணத்தை முன்பதிவு செய்த ஈஸிஜெட் நிறுவனம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
