கடலின் ஆழங்களில் இன்னும் முழுமையாக புரியாத அசுர சக்தி வாய்ந்த உயிரினங்களை பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். தற்போது, ஒரு அதிசயமான கடல் உயிரினம் — “தொலைநோக்கி மீன்” (Telescope Fish) பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பற்கள் பேயை நினைவுபடுத்தும் வகையில் கூர்மையானவை, கண்கள் முத்துக்களைப் போன்று பிரகாசமுடனும் பெரியவையாகவும் உள்ளன. இந்த வீடியோவை “@gunsnrosesgirl3” என்ற X பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ள இந்த வீடியோ, பலரை அதிர்ச்சியிலும் ஆர்வத்திலும் ஆழ்த்தியுள்ளது.
This is a telescopefish, a deep-sea creature with eyes made for spotting light in the dark ocean. pic.twitter.com/VzC5mRt3qz
— Moments that Matter (@_fluxfeeds) July 31, 2025
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதுபோல, இந்த மீனின் கண்கள் பயோலுமினென்சென்ஸ் (Bioluminescence) என்ற தன்மை கொண்டவை. இதன் மூலம், இந்த மீன் தானாகவே ஒளி உருவாக்கக்கூடிய சிறப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. கடலின் இருளில் கூட வெகு தொலைவில் உள்ள இரையை கண்டறிவதற்கு இது உதவுகிறது.
பொதுவாக, இவை கடலின் 500 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இந்த தொலைநோக்கி மீனின் உடல் நீளமாகவும் மெல்லியதாகவும், பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. மேலும், பற்கள் கூர்மையானவை என்பதுடன், கண்கள் குழாய் வடிவிலும் ஒளியை சேமித்து வைத்துக்கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மீனின் தோற்றமும் இயக்கமும் அதிர்ச்சிகரமானது. அதன் கூர்மையான பற்கள், பெரிய கண்கள் மற்றும் மையம்பட்ட பார்வை, அவை வாழும் சூழலை உணர்த்துகின்றன. இந்த மீனின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பல நெட்டிசன்கள் “இது பேய் மீனா?”, “இதை பார்க்கிறதே பயமாக இருக்கு!” என்ற பதில்களுடன் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
