மாணவர்கள் உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாகவும், டிஜிட்டல் தளங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்கவும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனி இ-மெயில் ஐடி உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மாநிலத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் உடனடியாக இந்த பணியை மேற்கொண்டு, மாணவர்களுக்கு தேவையான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.