பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 10,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு 894 இடங்கள் மற்றும் புதுச்சேரிக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:
பணி: Customer Service Associates (Clerk)

மொத்த பணியிடங்கள்: 10,277

தமிழ்நாட்டில் காலியிடங்கள்: 894

புதுச்சேரியில் காலியிடங்கள்: 19

ஊதியம்: ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை

வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் (01.08.2025 )

அரசு விதிப்படி SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது சலுகை உண்டு

கல்வித் தகுதி: ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பக் கடைசி நாள்: 21.08.2025

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://www.ibps.in

தேர்வு முறை:
இந்த ஆட்சேர்ப்பு தேர்வு இரண்டு கட்டங்களில் நடைபெறும்:

முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)

மதிப்பெண்கள்: 100

பகுதிகள்: ஆங்கிலம், கணிதம், திறனறிதல்

ஒவ்வொரு பிரிவுக்கும் 20 நிமிடங்கள்

மொத்தம்: 1 மணி நேரம்

தகுதி தேர்வாகவே பார்க்கப்படும்

முதன்மைத் தேர்வு (Main Exam)

மதிப்பெண்கள்: 200

பகுதிகள்: ஆங்கிலம், கணிதம், Reasoning, General/Financial Awareness

நேரம்: 160 நிமிடங்கள்

இதன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்

மேலும் விவரங்கள் மற்றும் முழுமையான அறிவிப்பை காண https://www.ibps.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வங்கிப் பணியை விரும்பும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் தவறவிடாமல் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!