விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் ரோகித் (வயது 4), குப்பநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. வகுப்பில் பயின்று வந்தான்.
இன்று காலை, ரோகித்தை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது, தந்தை முருகவேல் தனது ஆட்டோவில் அழைத்து சென்றார். அதே நேரத்தில் சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் குழந்தையான ரோகித் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் கண் முன்னே ஆட்டோ கவிழ்ந்து குழந்தை உயிரிழந்தது அந்த குடும்பத்தையே மட்டுமல்ல, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
