கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 4 வயது மகனை ஒருவர் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் சடென் பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் தந்தை கண்முன்னையை 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.