பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் மொத்தமாக 10,277 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டிற்கே தனியாக 894 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் பங்கேற்கும் வங்கிகள்:

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா

கனரா வங்கி

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

இந்தியன் வங்கி

இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் & சிந்து வங்கி

யூகோ வங்கி

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

பதவி பெயர்: Customer Service Associate (Clerk)

மொத்த காலியிடங்கள்: 10,277

தமிழ்நாட்டில் காலியிடங்கள்: 894

வயது வரம்பு: 01.08.2025 தேதிக்கேற்ப, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள் சலுகை

OBC – 3 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

கணினி அறிவு கட்டாயம் – கணினி சான்றிதழ், டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

₹24,050 – ₹64,480 வரை ஊதியம் (அளவளாவிய இன்கிரிமென்ட் அடிப்படையில்)

தேர்வு முறை:

IBPS Clerk தேர்வு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு (Prelims)

முதன்மைத் தேர்வு (Mains)

முதல்நிலைத் தேர்வு:

மொத்தம் 100 கேள்விகள் – 100 மதிப்பெண்கள்

பாடப்பிரிவுகள்:

ஆங்கிலம்

திறனறிதல் (Reasoning)

கணிதம் (Numerical Ability)

ஒவ்வொரு பிரிவிற்கும் 20 நிமிடங்கள் – மொத்தம் 60 நிமிடங்கள்

தகுதி தேர்வு மட்டுமே – இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் Mains தேர்வுக்கு செல்லலாம்

நடைபெறும் மாதம்: அக்டோபர் 2025

முதன்மைத் தேர்வு:

மொத்தம் 155 கேள்விகள் – 200 மதிப்பெண்கள்

பாடப்பிரிவுகள்:

ஆங்கிலம்

திறனறிதல்

கணிதம்

பொது/நிதி அறிவு (General/Financial Awareness)

மொத்த நேரம் – 160 நிமிடங்கள்

நடைபெறும் மாதம்: நவம்பர் 2025

இதில் பெறும் மதிப்பெண்களின்படி இறுதி தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்

முக்கிய குறிப்பு: இரு தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் ஆன்லைன் வழியாக மட்டுமே செய்யலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.ibps.in

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவு / OBC / EWS – ₹850

SC / ST / PWD / EXSM – ₹175

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2025

கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், syllabus, மாதிரி கேள்வித்தாள்களும் உள்ளிட்ட விவரங்களை காண https://www.ibps.in இணையதளத்தைப் பார்வையிடவும்.