ஜீன்ஸ் பேன்ட் என்பது இன்றைய ஃபேஷன் உலகில் எல்லா தரப்பினராலும் விரும்பப்படுகின்ற ஆடை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஜீன்ஸைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த ஜீன்ஸ் பேன்ட்களில் மேலே வலது பக்கத்தில் இருக்கும் சிறிய பாக்கெட்டை பார்த்து எப்போதாவது அதுக்கான காரணம் பற்றி யோசித்ததுண்டா?
அந்த சிறிய பாக்கெட், உங்களுக்குத் தெரியாமலே ஒரு பழமைவாய்ந்த வரலாற்றைச் சொல்கிறது. 1800களில் தொழிலாளர்கள் – குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், தச்சர்கள் ஆகியோர் தினசரி கடுமையாக உழைக்கும் நிலையில் இருந்தனர்.
அந்த நேரத்தில், அவர்கள் வைத்திருந்த சிறிய டயல்களுடன் கூடிய கடிகாரங்களை பாதுகாக்கும் வகையில், அந்த சிறிய பாக்கெட் உருவாக்கப்பட்டது. இது “வாட்ச் பாக்கெட்” என்று அழைக்கப்பட்டது.
இந்த சிறிய பாக்கெட், ஜீன்ஸ் பேன்ட்களில் 1873-ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. லெவி ஸ்ட்ராஸ் நிறுவனமும், அவரது கூட்டாளரான டேவிஸ் ஆகியோர், தொழிலாளர்களின் புகாரை அடிப்படையாகக் கொண்டு பாக்கெட்டுகள் சீக்கிரம் கிழிந்து விடுவது போன்ற பிரச்சனைகளை மெட்டல் பட்டன்களை சேர்த்தனர்.
இந்த சிறிய பாக்கெட், கடிகாரங்களை நன்றாகப் பாதுகாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, உலோகக் குறைவால் இந்த சிறிய பாக்கெட்டில் இருந்த ரிவெட்டுகள் (metal buttons) சில காலம் அகற்றப்பட்டன. ஆனால், பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டன.
1873-ஆம் ஆண்டு ஜீன்ஸுக்கு காப்புரிமை கிடைத்த பிறகு, லெவி ஸ்ட்ராஸ் நிறுவனம் தனது Lot 501 என்ற பிரபலமான ஜீன்ஸுடன் இந்த சிறிய பாக்கெட்டை இணைத்து அறிமுகப்படுத்தியது. இது உலகம் முழுவதும் ஜீன்ஸ் வடிவமைப்பில் ஒருவித அடையாளமாக மாறியது. அந்த சிறிய பாக்கெட்டில் பழமையில் பணம், சுருள்கள், நகை போன்றவை வைக்கப்பட்டன. இன்று கூட அது பயன்படுத்தப்படுவதால், அந்த வடிவமைப்பு தொடர்ந்தும் வைத்திருக்கப்படுகிறது.
இன்றைய ஃபேஷன் யுகத்திலும், இந்த சிறிய பாக்கெட்டின் முக்கியத்துவம் குறையவில்லை. பெண்களும், இளைஞர்களும் ஜீன்ஸைப் போட்டியாக அணிவது வழக்கமானதாகிவிட்ட நிலையில், இந்த சிறிய பாக்கெட்டுகள் ஒரு அழகு வடிவமைப்பாகவும், சில சமயங்களில் நடைமுறை பயன்பாட்டுக்காகவும் உள்ளது. கடந்த கால வரலாற்றை நினைவூட்டும் வகையில் இந்த சிறிய பாக்கெட் இன்று வரை ஜீன்ஸ் பேன்ட்களில் இடம் பிடித்து இருப்பது மிகவும் சுவாரஸ்யமான விடயமாகும்.
