மும்பை தானே ரயில்வே நிலையத்தில் உள்ள மேடைக்கால்பாலத்தில், ஒரு பெண் பயணியிடம் டிக்கெட் சரிபார்ப்பு செய்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், அலுவலக உடையில் இருந்த அந்த பெண், டிக்கெட் சரிபார்க்க வந்த அதிகாரிகளிடம் கத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
If you have the ticket pls show it to them and if you do not have then stay calm, accept your mistake, pay fine and leave gracefully. These acts will make your case worst. pic.twitter.com/m8BxbmjmNI
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) August 4, 2025
அவர் தப்பிச் செல்ல முடியாமல் இருக்க, அவரது ஹேண்ட்பேக்கை அதிகாரி ஒருவர் பிடித்திருந்தார். அருகிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரி அமைதியாக பேச முயன்றும், அந்த பெண் பயணி தொடர்ந்து கோபத்தில் குரல் உயர்த்துகிறார். அந்த பெண், “டிரைன் ஓடவே இல்லையே! என் நிலையைப் பாருங்களேன்!” எனக் கூறியபோது, அதிகாரிகள் “டிக்கெட் காண்பியுங்கள்” என கூறினர்.
உடனே, “QR code கொடுங்க! எனக்கு அவசரமா போகணும்!” என கத்தினார். அந்த மேடைக்கால்பாலம் ஏற்கனவே கூட்டமாக இருந்த நிலையில், அந்த சண்டை மற்ற பயணிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ வைரலாகி, மக்களின் பார்வையில் ரயில்வே அதிகாரிகள் நிதானமாக நடந்துகொண்டதாகவும், அந்த பெண் அதிகாரிகளுடன் தண்டனைக்குரிய முறையில் நடந்துகொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
#WATCH | Mumbai Local: Man Turns Violent After Being Caught Without First Class Ticket On Virar Fast
Reported by: @Yourskamalk #mumbailocal #Mumbai #mumbainews pic.twitter.com/FGBTBMIhQ5
— Free Press Journal (@fpjindia) August 2, 2025
இதேபோல், ஆகஸ்ட் 2ம் தேதி விரார் ஃபாஸ்ட் லொக்கல் ரயிலில் பயணித்த போது, First Class பெட்டியில் Second Class டிக்கெட்டுடன் பயணித்த பயணிகள் சிலர் பிடிபட்டனர். அதில் ஒருவர் டிக்கெட் இல்லாதவராகவும் இருந்தார். அவர்களை பரிசோதனைக்குப் பிறகு பொரிவாலி நிலையத்தில் இறக்கி, அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் போது, ஒருவர் திடீரென கோபத்தில் அதிகாரி கணினி CPU மற்றும் பிற சாதனங்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அதிகாரியும், பயணியும் சிறு காயங்களுடன் தப்பினர்.
இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், டிக்கெட் சரிபார்ப்பில் ஈடுபடும் ரயில்வே அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள், உரிய டிக்கெட்டுடன் பயணம் செய்ய வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கை மதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
