சீனாவில் உள்ள டியான்ஜின் நகரில் சேர்ந்த தம்பதிக்கு சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்து தொடர்பாக அவர்களது மகன் மற்றும் மகள் இடையே ஏற்பட்ட தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்காக சகோதரன் மற்றும் சகோதரி இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இதனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்கள் இருவரும் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால் பெற்றோர்களின் இறுதி காலத்தில் மகன் மட்டுமே அவர்களை கவனித்துள்ளார். ஆனால் மகள் கவனிக்கவில்லை. இதனால் தத்தெடுக்கப்பட்ட மகனாக இருந்தாலும் இறுதி கட்டத்தில் பெற்றோரை கவனித்துக் கொண்ட மகனுக்கு சொத்துரிமையை வழங்கியது நீதிமன்றம். அதன் பின் மகளுக்கு ரூபாய் 66 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.