அமெரிக்காவின் பெர்க்லி கவுண்டியில் வாகன சோதனையின் போது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரால் சந்தேகத்துக்கிடமான ஒரு வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த பெண் ஓட்டுனரை சோதனை செய்தபோது, அவரது உடலில் உள்ளாடையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் மூடி மற்றும் மடக்கப்பட்ட டாலர் நோட்டில் வெள்ளை தூள் போன்ற பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வெள்ளை தூளை கைப்பற்றியதுடன், சோதனையில் ஈடுபட்ட பெண் போலீசாரர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது நெஞ்சு வலியுடன் தரையில் விழும் காட்சி, சட்டையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. உடனே அருகில் இருந்த மற்றொரு போலீசார் ‘நார்கான்’ எனப்படும் அவசர உயிர்க்காக்கும் ஸ்ப்ரேயை பயன்படுத்தி அவருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த அதிகாரி தற்போது நலமாக உள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அந்த தூள் ‘பென்டனில்’ என்ற மிக ஆபத்தான போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகிறது. மிகக் குறைந்த அளவில்கூட மூச்சுத்தடையோடு உயிர் பறிக்கக்கூடிய இந்த ரசாயனப் பொருள், சோதனை நடத்திய போலீசாரை மயக்கத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் பணியின் ஆபத்துநிலையை மேலும் உணர்த்துவதாக அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
NEW: Female South Carolina police officer collapses after an accidental fentanyl exposure during a search.
New bodycam footage shows a Berkeley County deputy jumping into action to save the female deputy who suddenly collapsed.
“A female deputy then searched the woman’s person… pic.twitter.com/rmobhomMhg
— Collin Rugg (@CollinRugg) August 2, 2025
“>
இதன் பின்னணியில், எல்லா போலீசாருக்கும் பாதுகாப்பு கையுறைகள், முககவசங்கள் மற்றும் நார்கான் ஸ்ப்ரே ஆகியவை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான தொடர்ந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
