மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பவுண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ‘ராஜா ப்ராவிஷன் ஸ்டோர்’ என்ற கடையை நடத்தி வந்த ரிஷப் குப்தா என்பவரை அடையாளம் தெரியாத 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல், கடந்த ஜூலை 29ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் தாக்கியுள்ளது.
அவர்கள் கோடரி, குச்சி, மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் வந்த அந்த கும்பல், கடைக்குள் நுழைந்து ரிஷப்பை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ரிஷப், உடனடியாக கடையின் ஷட்டரை மூடி தன்னை பாதுகாத்ததால் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு ரிஷப், பவுண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நேரடியாக சிவபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோரிடம் புகார் மனுவுடன் நேரில் சென்றுள்ளார்.
दुकानदार पर जानलेवा हमला, शटर बंद करके बचाई अपनी जान
मध्यप्रदेश के शिवपुरी जिले से एक चौंकाने वाला वीडियो सामने आया है, जहां परचुन की दुकान करने वाले एक युवक पर कुछ लोगों ने जानलेवा हमला बोल दिया. युवक पर कट्टे से फायर कर उसकी हत्या करने की भी कोशिश की गई. हालांकि उसने समझदारी… pic.twitter.com/RaZxAECEpb
— NBT Hindi News (@NavbharatTimes) August 3, 2025
தாக்கியவர்களில் பிரமோத் சர்மா, கார்த்திக் சர்மா, தீபக் சர்மா உள்ளிட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கார்த்திக் சர்மா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் ரிஷப் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோதும், இதுவரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ரிஷப் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் அச்சத்திலும், கோபத்திலும் உள்ளனர்.
காவல்துறை தாமதமாக நடவடிக்கை எடுப்பது குறித்தும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது தொடர்பாகவும், பொதுமக்கள் மத்தியில் கண்டனம் எழுந்துள்ளது. இது போன்ற தாக்குதல்களில் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
