பெங்களூருவில் ஒரு பிரபல இன்ஸ்டாகிராம் பயனர் சஞ்சீவிற்கு சொந்தமான ₹9 கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டடோர் ஸ்போர்ட்ஸ் கார் சாலையில் ஓடிய போதே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடந்துள்ளது.

அந்தக் காரில் இருந்து திடீரென புகையும் தீப்பிழம்புகளும் எழ, அருகில் இருந்தவர்கள் பதறிய நிலையில் நடந்ததை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @ka_11_editor_

வீடியோவில், பிரகாசமான ஆரஞ்சு நிற லம்போர்கினி காரின் பின்புறத்தில் இருந்து தீ மற்றும் புகை வந்தது தெளிவாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அருகில் வந்து, தீயை அணைக்க முயற்சி செய்தனர். சிலர் தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதலில் கார் முற்றிலும் எரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பின்னர், காரின் உரிமையாளர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சேதம் மிகச்சிறியது, எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

தற்போது அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். லம்போர்கினி போன்ற சூப்பர் கார்களின் எஞ்சின் பின்புறம் அமைந்திருப்பதால், அதிக வெப்பம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் இத்தகைய தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.