ஒரு கணவன் தனது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் நோட்டு மாயமானதை கவனிக்கிறார். உடனே, அதை யார் எடுத்தார்கள் என்று சந்தேகிக்க, மனைவியிடம் நேரடியாகக் கேட்கிறார் – “நீ எடுத்தாயா?” என. அதற்கு மனைவி உடனே கோபமாகி, “எப்போதுமே பணம் காணாம போனாலே என்னமேல் தான் சந்தேகம் ” எனச் கோபப்படுகிறார்.
அப்போது கணவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அவர் “அந்த 500 ரூபாய் நோட்டு போலி” என்று கூறுகிறார். இந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மனைவி, “ஓ ஹோ! போலியா?” என பதிலளித்து, உடனே அந்த நோட்டை திரும்பக் கொடுக்கிறாள். அப்போதுதான் கணவன் சிரித்தபடி, “இது போலி இல்ல, உண்மையான நோட்டுதான்!” என கூற, மனைவி வாயடைத்து போனார்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ratika_kash என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோக்கு இதுவரை 1.38 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கணவன் மனைவி இடையேயான சின்ன சண்டைகளையும், அன்பும் கலந்த நகைச்சுவையாக உருவாக்கிய இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது.
