பிலாஸ்பூரில் அமைந்த சிம்லா – மதௌர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு ஒரு வேகமாக வந்த கார், சாலையில் சென்ற காளையின் மீது மோதி அதை சில மீட்டர்கள் வரை இழுத்துச் சென்றது. இந்தக் கொடூரமான சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில், சாலையின் நடுவே இருந்த காளையின் மீது வேகமாக வந்த கார் மோதுகிறது. மோதிய பிறகு, காளை காரின் அடியில் சிக்கி, வலியுடன் போராடுகிறது. அந்த விலங்கு நிற்கவோ நடக்கவோ முடியாமல் வேதனையில் தவிக்கிறது. இந்த நிலையில், அருகில் இருந்த இருவர் ஓடி வந்து காளைக்கு உதவ முயற்சிக்கிறார்கள். அப்போது மற்ற வாகனங்கள் அந்த இடத்தை சுற்றி விலகிச் செல்கின்றன.
सड़क पर बैठे बैल पर चढ़ा दी तेज रफ्तार कार
◆ हिमाचल प्रदेश के बिलासपुर में शिमला-मटौर राष्ट्रीय राजमार्ग की घटना
◆ बैल को कुछ दूरी तक घसीटते हुए ले गई कार, कार चालक मौके से फरार#ViralVideo #RoadAccident | Road Accident pic.twitter.com/07iBdN36Pu
— News24 (@news24tvchannel) August 3, 2025
இந்த சம்பவத்துக்குப் பிறகு, கார் ஓட்டுநர் அங்கேயே நின்றுவிட்டு உதவி செய்யாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த காளை சாலையைக் கடக்க முயன்றதா அல்லது அந்த இடத்தில் அமர்ந்திருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தற்போது வரை இந்த சம்பவம் குறித்து எந்தவொரு புகாரும் போலீசில் பதிவு செய்யப்படவில்லை. கார் ஓட்டுநரையும் இதுவரை அடையாளம் காணவில்லை. இந்த சோகமான சம்பவம் விலங்குகளின் பாதுகாப்பும், சாலை மேலாண்மையிலும் கவனம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.
