பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ஏபி டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் தனது மூன்றாவது சதத்தை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், லீக் உரிமையாளர் ஹர்ஷித் தோமர், போட்டி முடிந்த பின்பு  பேட்டி அளித்த போது, தொகுப்பாளர் கரிஷ்மா கோட்டக்கை நேரடியாக ப்ரொபோஸ் செய்து ஆச்சரியப்படுத்தினார், இது அவரது எதிர்பாராத தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தருணம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

 

அதாவது WCL பைனல்ஸ் முடிந்த பின்பு ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது போட்டிக்குப் பிறகு WCL உரிமையாளர் ஹர்ஷித் தோமரிடம் ஆங்கர் இன்டர்வியூ எடுத்தார். அப்போது தொடர் வெற்றிகரமாக முடிந்து விட்டது. நீங்கள் இதை எப்படி கொண்டாடப் போகிறீர்கள் என்று ஆங்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹர்ஷித் நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்களிடம் காதலை சொல்ல உள்ளேன் என்று தெரிவித்தார். இதை எதிர்பார்க்காத அவர் வெட்கத்தில் இன்டர்வியூவை முடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.