தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “மதராசி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன், டேன்சிங் ரோஸஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான சலம்பல் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் சில காரணங்களால் அப்பாடல் குறித்த நேரத்தில் வெளியிடப்படவில்லை. இதையடுத்து இந்த பாடல் இரவு 9 மணி அளவில் வெளியானது. சூப்பர் சுப்பு வரிகளில், சாய் அபயங்கர் இப்பாடலை பாடியுள்ளார். ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாக்கியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.