சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் கமலேஷ். இவர் அந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு இளைய மகனாக நடித்திருந்தார்.
இவர் மம்முட்டியான் பாடலுக்கு ஆடிய நடனம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகர் கமலேஷ் காஞ்சனா 4 படப்பிடிப்பு தளத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து அந்த பதிவில் அவர் கூறியதாவது, “பீஸ்ட் படம் பார்த்ததிலிருந்து அவங்கள ஒரு தடவையாச்சும் மீட் பண்ணிடனும்னு ரொம்ப நினைச்சுட்டு இருந்தேன்.
ஏன் எதுக்குன்னு தெரியாமலேயே எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். எப்போ பார்ப்போம் என்று எதிர்பார்த்த சூழலில் தான் அவர்களை காஞ்சனா4 படப்பிடிப்புத் தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவங்க என்னிடம் ரொம்ப அன்பாக பேசினார்கள் என்னோட படிப்பு, அம்மா, அப்பா அடுத்த படங்கள் குறித்து விசாரிச்சாங்க. டூரிஸ்ட் ஃபேமிலி பத்தி ரொம்பவே பேசி பாராட்டினார்கள்.
என்னுடைய மம்பட்டியான் பாடல் டான்ஸ் அவங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்ததாக கூறியதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.
