கிழக்கு சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக சினிமா துறையை விட்டு தொழில் செய்வதற்காக சொந்த ஊர் சென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் இறங்கி உள்ளார். தற்போது “ரெட் பிளவர்” என்ற திரைப்படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தை சந்திரமுகி,  எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றிய ஆண்ட்ரு  பாண்டியன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் விழா பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் மனிஷா ஜஸ்னானி கதாநாயகியாகவும், நாசர், தலைவாசல் விஜய், ஜான்விஜய், ஒய். ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி. எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே. மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தமிழக முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்னேஷ் கூறியதாவது, 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தேன்.

சிறிது காலம் சினிமா துறையை விட்டு தொழில்துறையில் இறங்கினேன். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளேன். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் வெளியாக உள்ள ரெட் பிளவர் கதை நடிகர் விஜய் காக எழுதி வைத்திருந்ததாக கூறினார்.

அந்தக் கதையைக் கேட்டதும் வியந்து விட்டேன். அந்தத் திரைப்படம் வரும் 2047ஆம் ஆண்டு நடக்க போகும் சம்பவத்தை கற்பனையான முறையில் வைத்து எடுக்கப்பட்டதாகும். மேலும் இத்திரைப்படம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.