மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் அரை நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசில் புகார் கொடுக்க அவர்கள் சம்பந்தப்பட்ட டீச்சரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதாவது அந்த மாணவனுக்கு instagram உள்ளிட்ட சோசியல் மீடியா மூலம் ஆசிரியை ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அரை நிர்வாண கோலத்தில் கடந்த சில நாட்களாகவே மாணவனுடன் அந்த டீச்சர் வீடியோ காலில் பேசிய நிலையில் மாணவன் இதனால் உளவியல் ரீதியாக மன பாதிப்புக்கு ஆளாகியுள்ளான்.

இந்த விஷயம் தெரிந்ததும் பெற்றோர் உடனடியாக போலீஸில் புகார் கொடுக்க அவர்கள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார் இதுபோன்று வேறு ஏதேனும் மாணவனுடன் அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.