சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அல்லிநகர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத் திறனாளியான நடராஜன் (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்புவனம் யூனியனில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இவர் குரூப் ஒன் தேர்வு எழுதிய நிலையில் முதல் நிலை தேர்வு வரை சென்றார்.

ஆனால் அவருக்கு கட் ஆப் மார்க் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. இதனால் நடராஜன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இதில் நடராஜனின் தந்தை வெளியூரில் தங்கி கூலிவேலை பார்க்கும் நிலையில் அவரது தாயார் நேற்று 100 நாள் வேலை திட்டத்திற்காக வழக்கம்போல் வீட்டில் இருந்து சென்று விட்டார்.

அப்போது நடராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக ராஜசேகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.