தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கோனார் கோட்டையை சேர்ந்தவர் சண்முகையா(36). இவர் கடந்த 2019 -ஆம் ஆண்டு கோவில்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமி வீட்டிற்குள் இருந்தபோது அத்துமீறி நுழைந்த சண்முகையா பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி குற்றவாளி சண்முகையா-விற்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
சண்முகையா மீது சாட்டப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சுமார் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் IPC section 450- ன் கீழ் 2 ஆண்டுகள் மெய்க்காவில் சிறை தண்டனையும், ரூபாய் 2000 – ம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு இழப்பீடாக அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ரொக்க தொகையாக வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
