உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின்  சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ‘மரணக் கிணறு’ பகுதியில் சாகசம் நடந்து கொண்டிருந்தது.. அப்போது   மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் காட்டிய இளைஞர் ஒருவர்  திடீரெனெ நிலைதடுமாறி கீழே விழுந்து   படுகாயமடைந்தார். காயமடைந்த இளைஞரை, அருகிலிருந்தவர்கள்  உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்த விபத்து நேரத்தில் பலரும் அங்கிருந்து மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிச் சென்று தங்களின் உயிரைப் பாதுகாத்தனர். அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. பின், ஓட்டுநர் இல்லாமலே அந்த சைக்கிள் தானாக  சிறிது நேரம் சுற்றி கொண்டே இருந்தது இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், ‘மரணக் கிணறு’ நடத்துபவருக்கு கடும் எச்சரிக்கை வழங்கினர். மேலும், இவ்வாறு மீண்டும் சம்பவம் நிகழாமல் இருக்க உத்தரவாதம் வழங்கும்படி அவரிடம் எழுத்துப் பத்திரம் பெற்றுள்ளனர். தற்போது, காயமடைந்த இளைஞரின் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“>