உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டம் மல்லாவான் பகுதியில் ஞாயிறு இரவு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்தது. நகராட்சி முன்னாள் தலைவர் பிரதிநிதி விஷால் ஜெயஸ்வா என்பவரின்  நெருக்கமான நபராகக் கருதப்படும் தாஜுத்தீன் என்ற சாணு என்பவர் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதல் நேரத்தில் சாணுவின் கழுத்துப் பகுதியில் குண்டு  பட்டதையும், அவர் தைரியமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று அருகிலுள்ள பெட்ரோல் பம்பில் உதவி கேட்டதையும் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொதுமக்கள் சாணுவை முதற்கட்ட சிகிச்சைக்காக அருகிலுள்ள  மல்லாவான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை சிறந்த சிகிச்சைக்காக லக்னோவிற்கு மாற்றினர். தற்போது சாணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

 

இவரது துணிச்சலான செயல்பாடு சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுகளை பெற்றுவருகிறது. இது தொடர்பாக போலீசார் நான்கு விசாரணைக் குழுக்களை அமைத்து, குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.