தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பாக விழா நடைபெறும் என்பதால் ஏராளமான மக்கள் கலந்து கொள்வதற்காக வருவார்கள். இதன் காரணமாக இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வேலை நாள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.
இதேபோன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
