தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பகுதியில் கனகராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கமலரோசன்(22) ஆறுமுகநேரியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருகிறார். கனகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதனால் அவர் மது குடிப்பதால் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு வந்துள்ளது. லட்சுமி கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கனகராஜ் தனது மனைவியிடம் குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால் மனைவி மறுத்ததால் சமையலுக்காக அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சுடு தண்ணீரை எடுத்து லட்சுமியின் மீது ஊற்றியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கனகராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மகனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தாயின் மருத்துவ செலவுக்கே நான் பணம் இல்லாமல் சிரமப்படுகிறேன்.
அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு கமலரோசன் தூங்கிவிட்டார். பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது கனகராசை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கமலரோசன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்கள். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர்.
