காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் முகமது சாதிக் (55) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு 18 வயது ஆகும் நிலையில் 12-ம் வகுப்பு முடித்து இருந்தார். இந்த மாணவி நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில் அதில் தேர்ச்சி பெற்று 502 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மாணவி தனக்கு இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இதனால் சம்பவ நாளில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தொழுகை செய்வதாக கூறிவிட்டு கதவை பூட்டி கொண்ட மாணவி நீண்ட நேரமாக  அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தனர். மாணவி தூக்கில் தொங்கியதை பார்த்து பெற்றோர் வேதனையில் துடித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.