செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 28ம் தேதி திங்கட்கிழமை வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நாளில் பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் தேரோட்ட விழாவையொட்டியும், அதே ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். ஆண்டாள் கோவிலின் தேரோட்டம் மக்கள் பெருமளவில் பங்கேற்கும் முக்கிய விழாவாகும் என்பதாலும், அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு வசதியாக உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 9ம் தேதி  வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் அந்த நாளில் இயல்பான வேலைநாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.