பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஜிராஜ்பூரில் அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்தச் சிறுமி வேலையை முடித்துவிட்டு சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர்.

பின்னர் ஓடும் காரில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டுச் சென்றனர். இது குறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.