தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் புதிய கையடக்க காற்றடிக்கும் கருவி அறிமுகமாகியுள்ளது. பஸ், லாரி, கார், இருசக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனங்களுக்குமான டயர்களில் காற்று நிரப்ப இக்கருவி பயன்படுகிறது.

கம்பக்டான (compact) வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவி எளிதாக கைகளில் வைத்துச்செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் முக்கிய சிறப்பம்சம், ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 டயர்களுக்கு காற்று அடிக்க முடியும்.

மேலும், டயரில் நிரப்ப வேண்டிய காற்றளவை முன்பே கருவியில் பதிவு செய்தால், அந்த அளவு நிரம்பியவுடன் கருவி தானாகவே நிற்கும் வசதியுடன் வருகிறது. இதில் காற்றின் அளவை அதிகரிக்கவும், குறைக்கவும் தனிப்பட்ட பட்டன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இக்கருவியை வாகனங்களில் எளிதாக வைத்துச் செல்லலாம்.

சாலைப்பயணங்கள் மற்றும் அவசர நிலைகளில் இது மிகுந்த உதவியாக இருக்கும். பெரும்பாலும் பைக்குகள் மற்றும் கார்களுக்காக தனியாக எயர்பம்ப் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், இக்கருவி ஒரு சர்வபோகமான தீர்வாக இருப்பதால், வாகன ஓட்டுநர்களிடையே விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.