பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ‘ உரிமை மீட்க.. தலைமுறை காக்க’ என்ற நடைப்பயணத்தை அன்புமணி இன்று திருப்போரூரில் தொடங்கினார். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அன்புமணி என்று மட்டுமே உள்ளது.
அன்புமணி ‘ ராமதாஸ் ‘ என அவரது பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது வேண்டுமானால் ‘R’ என இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனாலும் பேனர்களில் ராமதாஸ் சௌமியா ஆகியோரது போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.
