சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ நகரில் ஜியாங் என்ற பெண் இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பியபோது, நடந்த அதிசயம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வீட்டில் அமைதியாக இருக்குமென எதிர்பார்த்த ஜியாங், கதவை திறந்தவுடன் கோழி குஞ்சுகளின் சத்தத்தை கேட்டு மெய்சிலிர்க்கி விட்டார். விடுமுறைக்கு செல்லும் முன் வாங்கிய 90 முட்டைகளில் பெரும்பாலானவை இயற்கையாகவே குஞ்சு பொரிந்து விட்டதாக அவர் பின்னர் உணர்ந்தார்.
View this post on Instagram
இந்த முட்டைகள் வழக்கமானவற்றல்ல, ஹூஜுஸி என்ற வகையைச் சேர்ந்தவை. இவை கருவுற்ற நிலையில் சந்தையில் விற்கப்படும் வகை முட்டைகள். ஜியாங் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் சமையலறையில் விட்டு சென்றிருந்தார்.
அந்த நாட்களில் கிங்டாவோவில் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், ஈரப்பதமும் சேர்ந்து, இன்குபேட்டர் இல்லாமலே இயற்கையாக முட்டைகள் குஞ்சு பொரிக்கும் சூழ்நிலையாக மாறியது. மொத்தமாக, 90 முட்டைகளில் சுமார் 40 முதல் 50 முட்டைகள் குஞ்சு பொரிந்திருந்தன. வீடு திரும்பியபோது, அந்தக் குஞ்சுகள் வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தன.
மற்ற சில முட்டைகள் இன்னும் பொரிக்கக் கூடிய கட்டத்தில் இருந்தன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டவுடன் வைரலானது. பலர் “இது என் குழந்தைப் பருவ கனவுகள் நனவானது போல இருக்கிறது” எனவும், “அருமையான காட்சி” எனவும் உணர்ச்சிப் பூர்வமாக கருத்துகளை பகிர்ந்தனர்.
ஜியாங் தனது மகனுக்கு இரண்டு குஞ்சுகளை செல்லப்பிராணிகளாகக் கொடுத்துள்ளார். மீதமுள்ள குஞ்சுகளை பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பி, அவற்றை பாதுகாப்பாக வளர்க்க முடிவு செய்துள்ளார். தற்சமயம், இந்த இயற்கையான நிகழ்வு உலகம் முழுவதும் மக்கள் மனதில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
