தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரன். இவர் முத்துச்செல்வி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் முருகேஸ்வரன் தான் வேலை பார்க்கும் ஆயில் மில் நிறுவனத்தில் இருந்து கழிவு ஆயிலை எடுத்து 18000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாராம் என்பவர் பணத்தை தருமாறு கேட்டார். அதற்கு முருகேஸ்வரன் மூன்று நாட்களுக்குள் பணத்தை தருவதாக கூறினார். அதன் பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை.
இதனையடுத்து தான் வேலைக்கு சென்றால் பணத்தை கேட்டு ராஜாராம் தன்னை தாக்கி விடுவார் என்ற அச்சத்தில் முருகேஸ்வரன் தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து மயங்கி கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
