திருச்சி மாவட்டம் கழனிவாசல் பட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா (30). கணவரை பிரிந்து வாழ்ந்த சுகன்யா கழுத்து நெரிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஸ்பா பொய்கை பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சுகன்யாவை கொலை செய்வது தெரியவந்தது.
தினேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது தினேஷுக்கும் சுகன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சுகன்யா தினேஷுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கோபம்டைந்த தினேஷ் சுகன்யாவை பேசி சமாதானம் செய்து மணப்பாறைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வைத்து தகராறு ஏற்பட்ட போது சுகன்யா உன்னை எனக்கு பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தினேஷ் சுகன்யாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
