வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நாளை  காலை 9 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் வட்டார அளவிலான கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.