சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் நயினார் பேட்டை பகுதியில் ஆறுமுகம் (35)- ரேவதி (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் ஆறுமுகம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் உறவினர்கள் சிலர் ஆறுமுகம் வீட்டிற்கு சென்றபோது கதவு திறந்த நிலையில் கிடந்தது. அப்போது கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு அறையில் தூக்கில் தொங்கினர். அவர்களை உடனடியாக இருவரையும் கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாய் தந்தையை இழந்த குழந்தைகள் பரிதாபமாக இருக்கிறது.
