இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Self-Harm Kalesh😭
pic.twitter.com/40y70Uw0Yg— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 22, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் மீது ஏறி அமர்ந்திருந்தார். அந்த பைக் சென்டர் ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தது. இதையடுத்து பைக்கின் மேல் அமர்ந்திருந்த வாலிபர் பைக்கை ஆன் செய்து ஆக்சிலேட்டரை கொடுத்தார். மீண்டும் மீண்டும் அதிகமாக ஆக்ஸிலேட்டரை கொடுக்க அந்த வண்டி திடீரென நகரத் தொடங்கியது.
இதையடுத்து அந்த வண்டி பல அடி தூரம் பறந்து சென்றது. இதில் அந்த வாலிபரும் பறந்து சென்று கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டனர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
