கர்நாடக மாநிலத்தில் உள்ள யாத்ராமி பகுதியில் கஸ்தூரிபாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விஜயாஸ்ரீ பாட்டில் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினசரி பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்களை மிரட்டி தனக்கு கை கால்களை பிடித்து விடச் சொல்வது மற்றும் மசாஜ் செய்ய சொல்வது போன்றவைகளை வழக்கமாக வைத்திருந்தார்.
இதேபோன்று கடந்த 18ஆம் தேதி பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை மிரட்டி தனக்கு அவர் மசாஜ் செய்ய வைத்தார். அந்த ஊழியர் மறுப்பு தெரிவித்த போதிலும் அவர் தொடர்ந்து மிரட்டி அவரை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தினார். அந்தப் பெண் மசாஜ் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அதாவது பள்ளியில் இருந்து ஒருவர் அதனை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து போட பெற்றோர் தங்களுடைய whatsapp குழுக்களிலும் ம்பகிர்ந்தனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் ஹெட் மாஸ்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
