தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகும் “பெடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படம் அவருக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி டிவி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ராம்சரண் படத்திற்காக ஜிம் செல்கிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து வரும் நிலையில் ஜிம்மில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த திரைப்படமானது கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில் அதிக பொருட்செலவு கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
