மும்பை பாலிஹி பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகும் நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் பிரியா சர்மா என்ற பெண் மூதாட்டிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அதில் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக அளவிலான லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய மூதாட்டி அந்தப் பெண் அனுப்பிய வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்தார். அதில் பலரும் தாங்கள் லாபம் அடைந்ததாக கூறியிருந்தார்கள். அது அனைத்தையும் உண்மையென நம்பிய மூதாட்டி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதற்காக பிரியா சர்மா ஒரு குறிப்பிட்ட செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யச் சொல்லிய நிலையில், மூதாட்டியும் செயலியை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்ய ஆரம்பித்தார்.
அதன்படி ரூ. 7 கோடியை 87 லட்சம் வரை அந்த செயலியில் முதலீடு செய்ய பெரிதளவில் லாபம் வருவது போல மூதாட்டிக்கு தோன்றியது. அவர் அந்த பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றம் முயன்ற போது அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. எனவே சந்தேகமடைந்த அவர் தான் முதலீடு செய்த பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் தங்கள் பெயரில் எந்த முதலீடும் இல்லை என்று கூறிவிட்டனர்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி உடனடியாக மோசடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியை ஏமாற்றிய நபர்களை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
