கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் கே எம் தொட்டி பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புட்டசாமி என்பவர் காவல்துறையினராக வேலை பார்த்து வருகிறார். இவர் 112 அவசர உதவி மைய வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பெண் கே எம் தொட்டி பகுதியிலிருந்து தகராறு ஏற்படுவதாக அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அதன்படி புட்டசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணைக்கு பின், அந்தப் பெண் தன் கணவனை பிரிந்து தனிமையில் வசித்து வருவதை அறிந்த புட்டசாமி அந்த பெண்ணிடம் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்துள்ளார். அதன் பின் நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் கூறிய நிலையில், அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம்  தெரிவித்ததால் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இவர்களுக்கிடையேயான பழக்கம் அதிகமான நிலையில் அந்தப் பெண் புட்டசாமியிடம் ரூ.12 லட்சம் வரை கடனாக கொடுத்துள்ளார். அதை அனைத்தையும் வாங்கி விட்டு புட்டசாமி அந்த பெண்ணிடம் பேசுவதை திடீரென நிறுத்தியதால் அதிரிச்சியடைந்த அந்த பெண் புட்டசாமியிடம் தனது பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் புட்டசாமி அதற்கு மறுப்பு தெரிவிக்க, அந்தப் பெண் தற்கொலை செய்ய முயன்றார். அந்த சமயத்தில் அவர்களது உறவினரால் அந்தப் பெண் மீட்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி அந்தப் பெண் புட்டசாமி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ”காவல்துறையினரான புட்டசாமி தன்னை பலமுறை பலத்காரம் செய்துள்ளார். தன்னிடமிருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி தர மறுக்கிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய புட்டசாமியை தேடி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.