தேனி மாவட்டம் செம்பட்டி அருகே, கடந்த ஜூன் 13ஆம் தேதி நடந்த 29 லட்சம் ரூபாய் வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஒரு சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவனின் கடந்த கால செயல் ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளியில் படித்து கொண்டிருந்த போது, அந்த சிறுவன், தன்னுடைய ஆசிரியரை வகுப்பறையில் பகிரங்கமாக மிரட்டும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அதில் அந்த சிறுவன் “ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா பெயிலு” என பேசி ஆசிரியரையை மிரட்டுகிறார்.
தற்போது அந்த வீடியோவையும் விசாரணையில் போலீசார் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளார்கள். மேலும், குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சந்தேக நபர்களின் பின்னணியும் கவனிக்கப்படுகின்றது.சிறுவனின் மீதான வழக்குகள் தற்போது சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த வீடியோ அவரது மனநிலையை பிரதிபலிக்கிறது என்கின்றனர் சமூக சிந்தனையாளர்கள்.
