கரூர் மாவட்டத்தில் தனியார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் விஷ்ரூத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்ருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் கணவன் தன் மனைவியை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை தன் மனைவியை பார்ப்பதற்காக விஷ்ரூத் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்தால் கத்தியை எடுத்து அவர் தன் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்த நோயாளிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் கணவரை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.